|
| |
|
|
| |
You are at
Home Page
>>
Exams
>>
TNPG
>>
2008
>>
Notification
|
| TNPGMEE - (TamilNadu PG) Post Graduate Medical Entrance Exam - POST GRADUATE DEGREE / DIPLOMA / 5 YEAR M.Ch. (NEURO SURGERY) / MDS COURSES - Examination Conducted by Director of Medical Education, Government of Tamil Nadu
|
|
TNPG 2008 - Prospectus
TNPG 2008 - Notification
The Entrance Examination For Post Graduate Degree / Diploma / 5 Year M.Ch. (Neuro Surgery) And MDS Courses For The Year 2008-09 Which Is Scheduled To Be Held On 27.01.2008 (Sunday) Has Been Postponed To 24.02.2008 (Sunday). The Centres Of Examination Will Be Intimated Later After Notification And Application.
As per the Press Release, TNPG is likely to be in January 2008
From http://www.dailythanthi.com/article.asp?NewsID=373920&disdate=11/13/2007
அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு
ஜனவரி மாதம் நடக்கிறது
சென்னை, நவ.13-
அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது.
மருத்துவ பட்டமேற்படிப்பு
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்பட 14 இடங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி., எம்.எஸ். போன்ற மருத்துவ பட்டமேற்படிப்புகளும் பல்வேறு பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டனர். முதுநிலை மருத்துவ படிப்பை பொறுத்தவரையில், சென்னை, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் பொது மருத்துவம், மயக்கவியல், மகப்பேறு, குழந்தை மருத்துவம், நரம்பியல், ரேடியாலஜி உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் எம்.டி, எம்.எஸ். படிப்புகள் உள்ளன. இது தவிர, எம்.டி.எஸ். பல் மருத்துவ படிப்பிலும் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள் இருக்கின்றன.
ஜனவரியில் நுழைவுத்தேர்வு
இவை அனைத்தையும் சேர்த்து முதுநிலை மருத்துவ படிப்புகளில் மட்டும் 925 இடங்கள் உள்ளன. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் டாக்டர்கள் சேர்க்கப்படுவார்கள். நுழைவுத்தேர்வுக்கு 90 மதிப்பெண். பணி அனுபவத்திற்கு 10 மார்க் ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் டாக்டர்கள் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார பணிகள் டைரக்டர் ஜெனரல் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் இந்த நுழைவுத்தேர்வை ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க மாநில மருத்துவ கல்வி இயக்கக தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அட்மிஷன் பற்றிய அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.
|
|
|
| Are you Preparing for the Indian PG Exams |
Have you read the FirsTest Series Pretest Styled books with Questions from Indian Exams
|
|
|